/
கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
மயிலாடுதுறையில் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
ADDED :2792 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள திருவிழந்தூரில் ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களுல் 22வது தலமும், பஞ்ச அரங்கங்களில் ஒன்றுமான இந்த கோயிலில் பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருத்தேரோட்டம் நேற்று (மார்ச் 30)ல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ தேவி, பூ தேவி தாயார்களுடன் பரிமளரெங்க நாதர் தேரில் எழுந்தருளி திருத்தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு கோவிந்தா, பரிமளரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்து, பெருமாளை சேவித்தனர்.