தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டத்தில் புனித வெள்ளி வழிபாடு
புனித வெள்ளியை முன்னிட்டு மதுரை ஞான ஒளிவு புரத்தில் புனித வளவனார் சர்ச்சில் சிலுவை பாதை ஜெபவழிபாட்டில் வெண் துணி போர்த்தி வழிபட்டனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தேவாலயங்களில் புனித வெள்ளியை யொட்டி சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
கிறிஸ்தவர்கள் புனித வாரமான கடந்த ஞாயிறு குறுத்தோலை ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச் 29)ல் தேவாலயங்களில் பெரிய வியாழன் நிகழ்வு நடந்தது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை சர்ச்சில் நிர்வாக தந்தை செல்வராஜ் தலைமையில் பாதிரியார் பன்னீர்செல்வம் முக்கிய பிரமுகர்களின் பாதங்களை கழுவினார். நேற்று (மார்ச் 30)ல் கிறிஸ்துவ ஆலயங்களிலும் புனித வெள்ளியையொட்டி சிலுவைபாதை வழிபாடு நடந்தது.
செம்பட்டி: புனித வெள்ளியை முன்னிட்டு கன்னிவாடி, செம்பட்டி, சின்னாளபட்டி பகுதிகளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக, அனுமந்தராய ன்கோட்டை, குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி, கரிசல்பட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஏ.வெள்ளோடு, என்.பஞ்சம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, பகுதிகளில், ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கூட்டுப்பிரார்த்தனை, ஆராதனை நடந்தது.
ஒட்டன்சத்திரம்: புனித வெள்ளியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், அம்பிளி க்கை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்த னை, ஆராதனை நடந்தது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று (மார்ச் 30)ல் பஸ்ஸ்டாண்ட் பகுதியிலிருந்து சிலுவை பாதை ஊர்வலம் நகரின் முக்கிய தெருக்களின் வழியாக இருதயாண்டவர் தேவால யத்தை சென்றடைந்தது. சிலுவை பாதை ஊர்வலத்தில் பாதிரியார் ஜெரோம் எரோனிமுஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி: புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (மார்ச் 30)ல் மாவட்டத்தின் பல்வேறு பகுதி சர்ச்களில் சிறப்பு வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, சிலுவை பாதம் ஊர்வவலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் உயிர்ப்பித்து எழுந்த ஞாயிறுகளின் முன் வரும் வெள்ளிக்கிழமை யை புனித வெள்ளி தினமாக வழிபடுகின்றனர்.
தேனி - மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., சர்ச்சில் நேற்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு பாதிரியார் ஜான் மார்ட்டின் தலைமையில், சிலுவை பாதம் ஏந்தி வழிபாடு செய்யப்பட்டது. கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பாதிரியார் புன்னகை மன்னன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
* தேனி என்.ஆர்.டி., நகர் சி.எஸ்.ஐ., பரிசுத்த பவுல் சர்ச்சில் சிறப்பு வழிபாடு, ஆராதனை காலை 11:00 மணிக்கு பாதிரியார் ஜேக்கப்வின்சிலின் தலைமையில் நடந்தது. சிலுவைப்பாடு வழிபாடுகள் பகல் 2:00 மணி வரை நடந்தது. நாகர்கோவில் பாதிரியார்கள் ஜெயின்குமார், ஜெகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் சிலுவை பாதம் ஏற்றல் குறித்த போதனைகள் வழங்கப்பட்டன.
* பெரியகுளம் புனித அமல அன்னை சார்ச்சில் பூம்பா பிரார்த்தனை நடந்தது. பாதிரியார் ஜெயசீலன் தலைமை வகித்தார். இரவு சிலுவை பாதம் ஊர்வலம் நடந்தது.
*போடி யுனைடெட் பெந்தகோஸ்து சர்ச்சில் பாதிரியார்கள் ராஜன், ஜோயல் தலைமையில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
போடி அதுல்லம் சர்ச்சில் பாதிரியார் பீட்டர்பால் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.
* புதுச்சேரி: புனித வெள்ளியையொட்டி, ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி பவனி வந்தனர். ஏசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர் துறந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
புதுச்சேரி தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சிகள், ஏசுவின் மரணப்பாடுகளை நினைவுகூறும் சிலுவைப் பாதை வழிபாடு, சிலுவையை முத்தம் செய்தல், திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
ஜென்மராக்கினி ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.
மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.