திருவண்ணாமலை கோவில் உண்டியல் வசூல் ரூ.97 லட்சம்
ADDED :2786 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வரும் பக்தர்கள், நேர்த்திக் கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 267 கிராம் தங்கம், 571 கிராம் வெள்ளி, 96.95 லட்சம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்திஇருந்தனர்.