உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

உடுமலை மாரியம்மன் கோவிலில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வழிபட்டனர்.உடுமலையில், பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்திருவிழா நடத்தப்படுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். நடப்பாண்டு கடந்த மாதம் 20ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது.தொடர்ந்து கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றுதல், பூச்சட்டி எடுத்தல் என தினமும் பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.அதனையொட்டி, நேற்றுமுன்தினம் பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்துச்சென்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !