உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் மருதகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

திருமங்கலம் மருதகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

திருமங்கலம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் மருதகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. நேற்று பக்தர்கள் சக்தி கிடா வெட்டினர். பால்குடம், கரகம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஏப்., 4) பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னிசட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துதல் நடக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !