உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொத்தாம்பாக்கம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கொத்தாம்பாக்கம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

கண்டமங்கலம் : கொத்தாம்பாக்கம் வலம்புரி சுந்தரவிநாயகர், முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (4ம் தேதி) நடக்கிறது. கண்டமங்கலம் அடுத்த கொத்தாம்பாக்கம் கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர், சொர்ணாம்பிகை சமேத முத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் கரிக்கோலம் கண் திறப்பு, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை நான்காம் கால யாக பூஜை, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !