/
கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2787 days ago
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தீ சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 29 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 30 முதல், ஏப். 4ஆம்தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம்,பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்.5ல்) பொங்கல் வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், தீ சட்டி, கஞ்சி களையம் சுமந்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினார். பங்குனி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் நாளான ஏப்.8 அன்று இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுபெறும்.