உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் தரை விரிப்பான் அமைப்பு

அருணாசலேஸ்வரர் கோவிலில் தரை விரிப்பான் அமைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரி வெயிலை தாண்டியுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்திற்குள், பாதச்சூட்டால், நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக, சில நாட்களுக்கு முன், வெள்ளை நிற, கூல் பெயின்ட் அடிக்கப்பட்டது. அவை, போதுமானதாக இல்லை, என, பக்தர்கள், கலெக்டரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் கந்தசாமி, உடனடியாக, தேங்காய் நாரினாலான தரை விரிப்பானை அமைக்க, கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தரைவிரிப்பான் அமைக்கும் பணி நடந்து வருவதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !