முட்டாள் கருப்பணசுவாமி கோவிலில் பொங்கல் விழா
ADDED :3105 days ago
கொடுமுடி: முட்டாள் கருப்பணசுவாமி கோவிலில், பொங்கல் விழா நடந்தது. சிவகிரி அருகே, கவுண்டம்பாளையத்தில், முட்டாள் கருப்பணசுவாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல்விழா கடந்த, 7ல் தொடங்கியது. அன்றிரவு, எல்லப்பாளையம் அத்தனூர் அம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தும், படைக்கலம் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து முட்டாள் கருப்பண சுவாமி, கன்னிமார் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவில் கிடா வெட்டி, முட்டாள் கருப்பணசுவாமிக்கு படையலிட்டு, பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.