உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் நடராஜர் அபிஷேகம்

திருக்கழுக்குன்றத்தில் நடராஜர் அபிஷேகம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் நேற்று, நடராஜர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற மலைக்கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் தாழக்கோவிலாக, பக்தவத்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறும். மேலும், பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆண்டுதோறும் ஆறு நாட்கள், நடராஜர் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டு சித்திரை நாளில் வரும் திருவோண நட்சத்திரத்தில், நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !