உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு, சித்திரைமாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காசிவிஸ்வநாதர் கோவிலைப்போன்று வாகனம் இல்லாமல் காலபைரவர் சன்னதி உள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று மாலை எண்ணெய், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மகாதீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று எள், நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !