அழகு நாச்சியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :2859 days ago
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் அழகு நாச்சியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. தெற்கு வெள்ளூர் கிராமத்தில் அழகு நாச்சியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை அலகு குத்தியும், பால்குடம் சுமந்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் தேர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.