திரவுபதி அம்மன் கோவிலில் 108 சங்கு, பால் அபிஷேகம்
மோகனூர்: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த, 108 சங்கு, பால், திருவிளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மோகனூரில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு லட்சார்ச்சனை, கணபதி ?ஹாமம், கோமாதா பூஜை, 108 சங்கு மற்றும் திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் கணபதி ?ஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, லட்சார்ச்சனை துவங்கி, இரவு, 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. நேற்று காலை, 9:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, 108 பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். இதையடுத்து, கோமாதா பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, 108 சங்காபி?ஷகம், இரவு, 7:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு, அபி?ஷகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.