கருப்பண சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2709 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர் கருப்பண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.