உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரக்காணம் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

மரக்காணம் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மரக்காணம் பூமிஸ்வரன் கோவில், முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில், அனுமந்தை ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமுக்கல் முத்தியாஜல ஈஸ்வரன் கோவில்களில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள சிவ பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !