சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்
ADDED :2806 days ago
சிவகாசி, சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 11 நாட்கள் நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். சூரசம்ஹாரம், கழுகேற்றம், கயர் குத்து, அக்னிசட்டி, முளைப்பாரி, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 12ல் தேரோட்டம் நடந்தது. அன்றிரவு மஞ்சள் நீராடி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்ல கொடி இறக்கம் நடந்தது. நேற்று முன் தினம் இரவு கோயில் வளாக தெப்பத்தில் தெப்போற்ஸவம் நடந்தது. அம்மன் தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்தனர்.