கருடா மலர்கள்!
ADDED :2799 days ago
தாமிரபரணி நதிக்கரையில் பூங்குளம் என்றொரு பகுதி இருக்கிறது. இங்கே ‘கருடா மலர்கள்’ என்றொரு வகை பூக்கள் மலர்கின்றன. இந்தப் பூக்கள் மலர்வதை வைத்தே இங்கே வசிக்கும் மக்கள், தாமிரபரணி நதியில் அந்த வருட நீர்வரத்து எப்படி இருக்கும் என்பதைக் கணித்து ஆருடம் சொல்லி விடுவார்களாம். கருடா மலர்கள் ஏராளமாகப் பூத்தால் அந்த வருடம் நல்ல மழை பொழிந்து, தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்; தரணி செழிக்கும் என்றும் நம்புகிறார்கள். கருடா மலர்கள் பூக்கவில்லை என்றால் மழைபொய்க்குமாம்!