கருட சேவையில் சுந்தரராஜ பெருமாள்
ADDED :2700 days ago
ஆர்.கே.பேட்டை : பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, சுந்தரராஜ பெருமாள் நேற்று, கருட வாகனத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த திங்கட்கிழமை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, சேஷ வாகனத்தில், சுவாமி வீதியுலா எழுந்தருளினார்.நேற்று, சிறப்பு மிக்க கருட சேவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் வீதியுலா எழுந்தருளிய பெருமாளை, பக்தர்கள் ஆரத்தி எடுத்து, வணங்கினர்.இன்று, வெள்ளிக்கிழமை அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் சுவாமி, நாளை காலை தேரில் உலா வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை, சக்கர ஸ்தானத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.