500 ஆண்டு பழமையான கோவிலில் 18 அடி நீளத்தில் அரிவாள் பிரதிஷ்டை
ADDED :2702 days ago
காங்கேயம்: காங்கேயம் அருகே, இரண்டு டன் எடையில், 18 அடி நீள அரிவாள், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, நத்தக்காடையூர் அருகே, கஸ்பா பழையகோட்டையில், மூடுபாறை கருப்பணசாமி கோவில் உள்ளது. இது, 500 ஆண்டு பழமையானதாகும். இரும்பு, செம்பு கலந்த உலோகத்தால், இரண்டு டன் எடையில், 18 அடி நீள அரிவாளை, ஈரோட்டை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ், சரவணன் காணிக்கையாக செலுத்தினர். கோவில் வளாகத்தில், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.