ஆவரம்பட்டி முனியம்மன் கோயிலில் வைகாசி விழா
ADDED :2723 days ago
ராஜபாளையம், ராஜபாளையம் ஆவரம்பட்டி முனியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று காலை சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரகம், முளைப்பாரி எடுத்தனர்.இரண்டாம் நாளான நேற்று பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில்முளைப்பாரி அலங்காரத்தில் அம்மன் மற்றும் வைரவன் சுவாமி , மணிமேகலை தெரு, தெற்கு, நடு, வடக்கு தெரு, ஊரணிப்பட்டி, வளையாபதி தெருக்களில் வீதி உலாவந்தனர்.இரவு அழகுத்தேவன் ரோட்டில் உள்ள மன்னார் குளத்தில் அம்மன் சிலை கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தலைமையில் பூசாரி சுப்பையா செய்தார்.