திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் கைலாய வாகனத்தில் சுவாமி புறப்பாடு
ADDED :2717 days ago
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவில், கைலாய வாகன காட்சி நேற்று நடந்தது. ராவணன் கைலாய மலையை பெயர்ந்து, நாட்டிற்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறார். சிவபெருமான் தனது ஒற்றை விரலால் அழுத்தி, துாக்க முடியாமல் செய்கிறார். இதனால், ‘சாம’ கானத்தை பாட, சிவபெருமான், மயங்கியபோது, கைலாய மலையை எடுத்து செல்வதாக ஐதீகம். இதை விளக்கும், கைலாய வாகன காட்சி நேற்று நடந்தது. சோமாஸ்கந்தர் ரூபத்தில், ஸ்ரீ விசாலாட்சியம்மன், ஸ்ரீ பூமி நீளா தேவி தாயார், கனக வள்ளி தாயார் சமேத ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருவீதி உலா வந்தனர்.