உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு

தீர்த்தபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு

கிருஷ்ணராயபுரம்: தீர்த்தபாளையம், மாரியம்மன் கோவில் திருவிழா, மஞ்சள் நீராடல் விழாவுடன் நிறைவு பெற்றது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, தீர்த்தம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த வாரம், கோவில் விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, விழா துவங்கியது. அம்மனுக்கு தினமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, அம்மன் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையில் மஞ்சள் நீராடல் விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து, திருத்தேரில் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !