உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து என்பது மதமில்லை

இந்து என்பது மதமில்லை

சென்னை: சைவ, வைணவத்தை தான், மதம் என்று கூறலாம். இந்து மதம் என்று, ஒன்று கிடையாது, என, சொற்பொழிவாளர், ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசினார்.
சுவாமி தயானந்த நினைவு டிஜிட்டல் நுாலகம், ஆராய்ச்சி மையத்தின் சார்பில், தயானந்த நினைவு சொற்பொழிவு, மயிலாப்பூரில் உள்ள, எச்.ஆர்.டி., மையத்தில், நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், நம் வாழ்க்கையில் இறைவன் எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர், ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாவது:சைவ, வைணவத்தை தான், மதம் என்று கூறலாம். இந்து மதம் என்று, ஒன்று கிடையாது. இந்து சமயம், இந்து தர்மம் என்று தான், கூற வேண்டும். மனிதன் எப்படி உயர்ந்தவன் என்பதை, தயானந்த சரஸ்வதி சுவாமிகள், தெளிவாக கூறியுள்ளார். பாவ, புன்னிய, கர்மா அடிப்படையில், ஜீவராசிகள் பிறக்கின்றன. தர்மம், மனிதனுக்கு மட்டுமே தொடர்பு உடையது. மற்ற ஜீவராசிகளுக்கு, அது கிடையாது என்கிறார். நெருப்பின் தர்மம், உஷ்ணம்; நீரின் தர்மம், குளிர்ச்சி. இதுபோல, ஒன்வொன்றுக்கும், ஒரு தர்மம் உள்ளது. எனவே, மனிதனுக்கு இருக்கும் தர்மத்தை, நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நம் பகுத்தறிவை பயன்படுத்தி, தர்மத்தை செய்து, அதர்மத்தை விலக்க வேண்டும். வாழ்க்கை என்பது, புலன்களுக்கு தீனிபோடுவது மட்டுமல்ல. உயர்ந்த லட்சியத்தை வெளிப்படுத்துவது தான்.பல கடவுள் இருந்தாலும், பரம்பொருள் ஒன்று தான் என்பதை, நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !