பாம்பாலம்மன் கோவில் திருவிழாவில் மாவிளக்கு பூஜை
ADDED :2723 days ago
கிருஷ்ணராயபுரம்: லட்சுமணம்பட்டி பாம்பாலம்மன் கோவில் திருவிழாவில், மாவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லட்சுமணம்பட்டி கிராமத்தில், பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்தல், பழையஜெயங்கொண்டம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் சார்பில், பூத் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த வாரம் நடந்தன. இந்நிகழ்ச்சிகளுக்கு அடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று, மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர்.