பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2790 days ago
கன்னிவாடி;கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசஷே பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.