தஞ்சையில் 24 கருட சேவை உற்சவம்
ADDED :2697 days ago
தஞ்சை: தஞ்சையில், 24 கருட சேவை உற்சவம், நேற்று நடந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த, 18 கோவில்கள் உட்பட, 24 கோவில்களில் இருந்து, கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர். அங்கிருந்து, அன்னபட்சி வாகனத்தில், திருமங்கை ஆழ்வார், எம்பெருமானை தொழுதவாறு முன்னால் சென்றார். தொடர்ந்து, 24 பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டனர். கருட வாகனத்தில் எழுந்தருளிய அனைத்துப் பெருமாள் சுவாமிகளும், கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கருட வாகனங்களிடையே, பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். மீண்டும், கொடிமரத்து மூலையை வந்தடைந்த பெருமாள் சுவாமிகள், அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர்.