உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்நாரியப்பனூர் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

மேல்நாரியப்பனூர் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுரில் உள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் பெருவிழா துவங்கியது. விழாவையொட்டி, நேற்றுமாலை 5:00 மணியளவில், கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார்.திருதல அதிபர் பால்ராஜ் மற்றும் சகாயராஜ், பிச்சை முகமது, ஆரோக்கியஜான் ராபர்ட் முன்னிலையில் திருப்பலி நடந்தது. இந்நிகழ்ச்சியில்அருட்தந்தையர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள், காரியக்காரர்கள், பங்குமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து வரும் 12ம் தேதி பொருத்தனை தேர்,13 ம் தேதி பெரிய தேர்பவனியும், 14ம் தேதி காலை கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !