காஞ்சிரங்குடி தர்கா சந்தனக்கூடு விழா!
ADDED :5010 days ago
கீழக்கரை : காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா ஒலியுல்லாஹ் தர்கா சந்தனக்கூடு விழா ஜன.,7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கந்தூரி விழா துவங்கியது. இஸ்லாமிய இசை நிகழ்ச்சி மற்றும் கிராமிய ஆடல், பாடல் நடந்தது. குதிரைகள் அணிவகுப்புடன் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தை, முனியப்பன் டி.எஸ்.பி., துவக்கி வைத்தார். தர்கா வளாகத்தில் சந்தனக்கூட்டை கூடியிருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஜூம்மா பள்ளி பேஷ் இமாம்கள் மவுலாஉசேன், யூசுப்ஆலிம் சிறப்பு துஆ ஒதினர்.