அறம் வளர்த்த நாயகி கோவிலில் யானை வாகனம் வெள்ளோட்டம்
ADDED :2707 days ago
சிவகங்கை: சோழபுரம் அறம் வளர்த்த நாயகி, அருள்மொழிநாதர் கோயிலுக்கு ஆறுார் வட்டகை நாடு இளைஞர் கூட்டமைப்பால் வெண்கலத்தால் ஆன யானை வாகனம் வழங்கப்பட்டது. அந்த வாகனத்தின் வெள்ளோட்ட விழா ஆறுார் வட்டகை நாட்டு அம்பலகாரர்கள் முன்னிலையில் நடந்தது.