உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலேசியா முருகன் கோவிலுக்கு சுவாமிமலையில் இருந்து அணையா விளக்கு

மலேசியா முருகன் கோவிலுக்கு சுவாமிமலையில் இருந்து அணையா விளக்கு

தஞ்சாவூர்: மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன்கோவிலுக்கு, சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட 50 லிட்டர் கொள்ளவு கொண்ட வெங்கலத்தால் ஆன அணையா விளக்கு வடிமைக்கப்பட்டுள்ளது.

மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேகத்தின் போது கோவிலின் எதிரே அணையா விளக்கு அமைக்க, அந்நாட்டைச் சேர்ந்த பக்தர் சண்முகநாதன் என்பவர் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள ஜெயம் சிற்ப கூடத்தில் அணையா விளக்கு வடிவமைத்து தருமாறு கோரினார். அதன்படி சிற்ப கூட ஸ்தபதிகள் 3 அடி உயரத்தில் 160 கிலோ எடையில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெங்கலத்தால் ஆன அணையா விளக்கை வடிவமைத்தனர். இந்த விளக்கு ஒரிரு தினங்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !