உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ கோவிலில் நாளை லட்சார்ச்சனை!

பஞ்சவடீ கோவிலில் நாளை லட்சார்ச்சனை!

புதுச்சேரி:பஞ்சவடீ ஆஞ்ஜநேய கோவிலில் தை மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு நாளை பால் அபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு தை மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு நாளை (21ம் தேதி) ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.இதனையொட்டி மாலை 5 மணிக்கு வழக்கமாக நடக்கும் பால் அபிஷேகம், காலை 8 மணிக்கு நடக்கும். அபிஷேகத்திற்குப் பின் ஆஞ்ஜநேய சுவாமிக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது.இத்தகவலை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !