உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை

வலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை

ஓசூர்: ஓசூர் வ.உ.சி., நகர் வலம்புரி விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 108 கோமாதா பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வ.உ.சி., நகரில், வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், படிப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்காகவும், 108 கோமாதா பூஜை மற்றும் மகா சண்டியாகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, மகா கணபதி பூஜை, மகாசங்கல்பம், கலசதாபனம், மகாதீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சண்டியாகம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, கொத்துார், முனீஸ்வரர் நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட, 108 கோமாதாவிற்கு, சிறப்பு பூஜைகள் செய்து, தீவனங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !