காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ.9.78 லட்சம் காணிக்கை
ADDED :2744 days ago
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம்.பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சரவணன் தலைமையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் மருதுபாண்டியன், ஆய்வாளர் சரண்யா மற்றும் ஊழியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் ஆகியோர் காணிக்கையை எண்ணினர். இதில், 11 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 9 லட்சத்து, 78 ஆயிரத்து, 479 ரூபாய், தங்கம், 58 கிராம், வெள்ளி, 92 கிராம் இருந்தது. அன்னதான உண்டியலில், 70 ஆயிரம் ரூபாய் இருந்தது.