உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவில்: வரும் 1ல் கும்பாபிஷேகம்

காசி விஸ்வநாதர் கோவில்: வரும் 1ல் கும்பாபிஷேகம்

கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், கிழக்கு அக்ரஹாரத்தில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கணபதி, ஆதிசங்கரர், விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை, 1 ல் நடைபெற உள்ளது. நாளை காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. ஜூலை, 1 ல், காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேக விழா, பாரதீ தீர்த்த ஸன்னிதானம் மற்றும் ஜகத்குரு சங்கராசார்ய விதுசேகர பாரதீ ஸன்னிதானம் அனுக்கிரஹத்துடன் நடைபெறுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !