உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தவார பிரசாதம்: தேன்குழல் முறுக்கு

இந்தவார பிரசாதம்: தேன்குழல் முறுக்கு

என்ன தேவை:

பச்சரிசி                      –  800 கிராம்
உளுந்தம் பருப்பு     –  200 கிராம்
உப்பு         – 1 1/2 டேபிள் ஸ்பூன்
வனஸ்பதி         –  1/2 கிலோ

* எப்படி செய்வது? உளுந்தம் பருப்பை மிதமான தீயில் சற்று சிவக்க வறுத்து அரைத்து சலித்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊற வைத்து நிழலில் உலர்த்தி ஈர மாவாக மிஷினில் அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பைக் கரைத்து, அதில் சிறிதளவு வனஸ்பதியை சேர்த்து மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.  

அடுப்பில் டால்டா காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு வட்டமாகப் பிழியவும். தேன்குழலைத் திருப்பி விட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். விருப்பம் இருந்தால் சிறிதளவு பெருங்காயத்தை கரைத்து மாவுடன் சேர்த்துப் பிசைய தேன்குழல்  மணமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !