மரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :5120 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அருகே மரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கரூர் மாவட்டம் க.பரமத்தி யூனியன் முன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோளப்பாளையம் மரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவப்பெருமான், நந்திக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யபட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதேபோல், க.பரமத்தி சந்தோஷ் நகரில் உள்ள அஷ்ட நாகேஸ்வரி கோவில், குப்பம் குங்குமவல்லி, கும்பேஸ்வரர், சின்னதாராபுரம் முக்தி முனீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.