உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவில் குளத்திற்கு தடுப்பு வேலி அவசியம்

கச்சபேஸ்வரர் கோவில் குளத்திற்கு தடுப்பு வேலி அவசியம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு, பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆமை வடிவில் உள்ள ஈஸ்வரனை, மஹா விஷ்ணு வழிபட்டதால், மூலவர் கச்சபேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். இக்கோவிலுக்கு கச்சாலீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கச்சபம் என்றால் ஆமை என்று அர்த்தம். இக்கோவிலில், இஷ்ட சித்தி தீர்த்தம் என்னும் தெப்ப குளம் அமைந்துள்ளது. இக்குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்காததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தில் இறங்கி கை, கால்களை கழுவும்போதும், குளிக்கும்போதும் இடறி விழும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சிஅம்மன், வரதராஜ பெருமாள் கோவில் தெப்ப குளத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்ததைப்போன்று, கச்சபேஸ்வரர் கோவில் குளத்திற்கும் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !