உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடி கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

பழநி திருஆவினன்குடி கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

பழநி: ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களில் முருகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. கார்த்திகையை முன்னிட்டு, மூன்றாம்படை திருஆவினன்குடி கோயிலில் மூலவர் குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், மகாலட்சுமி, அக்னி, காமதேனு, சூரியன், பூமாதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாரதனை நடந்தது. மலைக்கோயிலில் முருகருக்கு அபிஷேக, சிறப்புபூஜை நடந்தது. பழநி திரு ஆவினன்குடி கோயிலில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !