உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் காணிக்கை செலுத்த புது கட்டுப்பாடு

கோவில்களில் காணிக்கை செலுத்த புது கட்டுப்பாடு

பழநி: பழநி முருகன் கோவிலில், ஐம்பொன் சிலை மோசடியைத் தொடர்ந்து, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பழநி முருகன் கோவிலில், ஐம்பொன் சிலை மோசடியை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் தங்கம், வெள்ளி காணிக்கையாக வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறை புதியக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.பொருளின் எடை, எங்கு வாங்கப்பட்டது, ஐம்பொன் சிலையாக இருந்தால், உலோகங்களின் விபரம் அதன் எடையுடன், மதிப்பீட்டாளர் சான்றுடன் தரவேண்டும். கற்கள் பதிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றும் வேண்டும்.மோதிரம், வளையல், நெக்லஸ், கவசம் வழங்கினால், அதில் உபயதாரர் பெயர், கோவில் பெயர் பொறிக்க வேண்டும். காணிக்கையாக வழங்க விரும்பும் நபர் நேரடியாக வரவேண்டும்.முகவர் மூலம் வழங்கினால், அதற்கான ஆதாரத்துடன் வரவேண்டும். ஸ்தபதி மூலம் செய்திருந்தால் அவரது முகவரி, அலைபேசி விபரங்கள் தர வேண்டும். கடையில் வாங்கிய ரசீது இணைக்க வேண்டும். இந்த தகவல்களை, பழநி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !