உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பன் திருப்பதி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

அப்பன் திருப்பதி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

மேலுார், மேலுார் அருகே புதுசுக்காம்பட்டியில் அப்பன் திருப்பதி அய்யனார் கோயில் ஆனிதிருவிழா புரவி எடுப்பு நடந்தது.எட்டு நாட்கள் நடந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. எல்லா வளமும் கிடைக்க வேண்டிபக்தர்கள் கிராம கோயில் வீட்டிலிருந்து மந்தை வழியாக ஒரு கி.மீ., துாரத்திலுள்ள அப்பன் திருப்பதி அய்யனார் கோயிலுக்கு புரவிகள், உருவ பொம்மைகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கிடா வெட்டி பொங்கல்வைக்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !