திருக்குறுங்குடி கோயிலில் இன்று பத்ர தீப விழா
ADDED :5007 days ago
களக்காடு :திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் இன்று (24ம் தேதி) பத்ரதீப திருவிழா நடக்கிறது. திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ தலங்களில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவோணத்தன்று பத்ரதீப திருவிழா நடப்பது வழக்கம். இவ்வாண்டு பத்ரதீப திருவிழா இன்று (24ம் தேதி) மாலையில் கோயிலில் நடக்கிறது. பத்ரதீப திருவிழாவை முன்னிட்டு தீப விளக்குகள் ஏற்றபடுகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.