உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் கோவில்களில் விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு

தஞ்சாவூர் கோவில்களில் விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு

தஞ்சாவூர்:கோவில்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்ற தடையை நீக்கக் கோரி, வழக்கு தொடர, ஆன்மிகவாதிகள் முடிவு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற, இந்து அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதற்கு ஆன்மிகவாதி களும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளக்கேற்ற அனுமதி கோரி, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் ஒருங் கிணைப்பு சார்பில், அறநிலையத் துறை உதவி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து, இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது:கோவில்களில் பக்தர்கள், தங்கள் கைகளால் விளக்கேற்றுவது என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்க த்தில் உள்ள வழிபாட்டு உரிமை. இதன்மூலம் நேரடியாக, கடவுளிடம் பிரார்த்தனை செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தது.தற்போது, இதுவும் மறுக்கப்படுவது, பக்தர்களின் மனதை
புண்படுத்தும் செயல். பொதுமக்கள் பரிகாரம் மற்றும் வேண்டுதல்கள் ஆகியவற்றுக்கு, தங்களது கைகளால், அகல் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றுவது,
தவிர்க்க முடியாததாகும்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தங்கள் விருப்பத்துக் கேற்ப, மனம் போன போக்கில், தடை விதிக்க முடியாது. முதல் கட்டமாக மனு அளித்துள் ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !