சிவகங்கை காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2756 days ago
சிவகங்கை: சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்விழா ஜூலை 6ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தீப அலங்கார நெய்வேந்தியங்கள் நடந்தன. பூக்கரகம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன.
நேற்று (ஜூலை 13)ல் காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
மாலை 4:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் குழந்தையுடன் அருள்பாலித்தார். தொடர்ந்து விடிய, விடிய பூச்சொரிதல் விழா நடந்தது. நகர் முழுவதும் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடந்தன.