பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா
ADDED :2636 days ago
ஈரோடு: கோவை மாவட்டம், ஆனைகட்டி, திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில், மாதம் தோறும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, பன்னிரு திருமுறை முற்றோதுதல் பெரு விழா, ஈரோட்டில் நடக்கிறது. நிகழ்வின் ஏழாம் மாத விழா, ஆயிர நகர வைசியர் திருமண அரங்கில், நேற்று காலை முதல், மதியம் வரை நடந்தது. திருவாரூர் அரிகரதேசிக ஓதுவார் மூர்த்திகள் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதி ஓதுவார்கள் கலந்து கொண்டு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களைப்பாடி, விளக்கமளித்தனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.