சந்தியாகப்பர் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2688 days ago
ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை மறைமாவட்ட பாதிரியார் இருதயராஜ் கொடி ஏற்றினார். சிவகங்கை, தங்கச்சிமடம் பாதிரியார்கள் ஜான்கென்னடி, ராஜஜெகன் சிறப்பு திருப்பலி பூஜை நடத்தினர். ஜூலை 24 ல் திருப்பலி பூஜை,அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடக்கும். ஜூலை 25ல் சர்ச்சில் விழா சிறப்பு திருப்பலி பூஜை, மாலை விழா கொடி இறக்கப்படும். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சந்தியாதாஸ், நிர்வாகிகள் அந்தோணிராஜ், சந்தியாகு அருள்தாஸ், அந்தோணி செய்து வருகின்றனர். விழாவில் தங்கச்சிமடம் ஜமாத் நிர்வாகிகள் ரபாணி, பசீர், இந்து அமைப்பைச் சேர்ந்த நாகேந்திரன் பங்கேற்றனர்.