உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு கொண்டாடிய மக்கள்

அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு கொண்டாடிய மக்கள்

ஈரோடு: ஆடி மாதத்தின் முதல் நாளான நேற்று, ஈரோட்டில் பல்வேறு இடங்களில், பெண்கள் தேங்காய் சுட்டு கொண்டாடினர். தமிழ் மாதமான ஆடி, அம்மனுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா களை கட்டும். இந்நிலையில் ஆடி பிறப்பான நேற்று, தேங்காய் சுட்டு, விநாயகருக்கு சமர்ப்பித்து, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து, மக்கள் கொண்டாடினர்.தமிழர்களின் அடையாள விழாவாக கருத்தப்படும், இந்நிகழ்வு ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நெருப்பு மூட்டி, கும்பலாக நின்று, பெண்கள், சிறுவர் - சிறுமியர், தேங்காய் சுட்டு, அருகில் உள்ள கோவில்களில் உடைத்து, வழிபட்டனர். பின், சுட்ட தேங்காயை, அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !