நெல்லை சிதம்பரம் நகரில் நாளை ஹயக்ரீவர் கோயில் வாஸ்து பூஜை
ADDED :5064 days ago
திருநெல்வேலி:நெல்லை சிதம்பரம் நகரில் நாளை (26ம் தேதி) ஹயக்ரீவர் கோயில் பூமி பூஜை நடக்கிறது. நெல்லை தச்சநல்லூர் சிதம்பரம் நகரில் கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் கோயில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நாளை காலை 10.45 மணிக்கு நடக்கிறது. முன்னதாக வாஸ்துஹோமம், சுதர்ஸன ஹோமம், வாஸ்துபூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை மாதவன் பட்டாச்சாரியார் மற்றும் ஹயக்ரீவர் பக்தர்கள் செய்துள்ளனர்.