உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாக்கம் புதுார் ஸ்ரீமுனீஸ்வரனுக்கு கும்பாபிஷேகம்

பாக்கம் புதுார் ஸ்ரீமுனீஸ்வரனுக்கு கும்பாபிஷேகம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் புதுார் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, எஜமானார் சங்கல்பம், சுக்தி புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம்,வாஸ்து சாந்தி ப்ரவேசபலி கும்ப அலங்காரம் யாககாலை பிரவேசம் உட்பட முதற்கால யாக சாலை பூஜைகள் நடைப்பெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 108 திரவிய ஹோமம், வேத பாராயனம் உட்பட பூஜைகள் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து 9:30 மணிக்கு கடம் புறப்பட்டு, ஸ்ரீமுனீஸ்வரன் சுவாமி சிலைக்கு கலச  நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !