உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் எழுந்தருளல்

சேஷ வாகனத்தில் சேதுநாராயணப் பெருமாள் எழுந்தருளல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவின் முதல்நாளில் சுவாமி சேஷவாகன எழுந்தருளும் துவக்கவிழா நிகழ்ச்சி நடந்தது. காலையில் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் திருமஞ்சன வழிபாடு , கோயில் முன் மண்டபத்தில் யாகசாலை வழிபாடு  நடந்தது. மாலையில் சுவாமி சேஷவாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு திவ்யநாம பஜனை வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு தீபாராதனை வழிபாட்டிற்கு பின் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை வந்தடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ், பக்தசபா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !