அங்காளம்மன் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :2713 days ago
புதுச்சேரி: அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா, ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 37ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை விழா, வரும் ஆகஸ்ட் 12ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், தேவஸ்தானத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு, 0413–2332458 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.